வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! |

த்ரிஷா லேசா லேசா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகி ஆனவர். அதைத்தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் தனக்கு கதை கேட்பது முதல் கால்சீட் பார்ப்பதுவரை எல்லா டீலிங்கையும் தனது தாய்குலம் உமா கிருஷ்ணனிடமே விட்டிருந்தார். அதனால் த்ரிஷா ஸ்பாட்டிற்கு செல்லும்போது மட்டும்தான் சம்பந்தப்பட்ட டைரக்டர்களோ, நடிகர்களோ அவரிடம் பேச முடியும். ஆனால் நடித்து முடித்த அடுத்த நிமிடமே நீ யாரோ நான் யாரோ என்பது போல் அவர்களிடமிருந்து விடைபெற்று வந்து விடுவார்.
ஆனால் தற்போது, அதாவது சமர் படத்துக்குப்பிறகு தான் புதிதாக ஏற்று நடிக்கும் கதைகளை தானே கேட்டு முடிவெடுக்கத் தொடங்கியிருக்கிறார். மேலும், முன்பு பாடல் காட்சிகளில் கிளாமர் என்று டைரக்டர்கள் வாய் திறந்தாலே அவரது அம்மா என் பொண்ணுக்கு ஓவர் கிளாமர் செட்டாகாது என்று கத்திரி போடுவார். ஆனால் இப்போது த்ரிஷாவோ, என் மெல்லிதான உடம்புக்கு கவர்ச்சி கச்சிதமாக இருக்கும் என்று சொல்லி, தேவையான அளவு கிளாமர் எக்ஸ்போஸ் செய்ய நான் ரெடி என்று நெத்தியடியாக சொல்கிறாராம். அதனால் த்ரிஷாவின் இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு என்று அவரை சந்தித்து வந்த இயக்குனர்கள் உற்சாகத்துடன் சொல்கின்றனர்.