500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
மேயாதமான் படத்தில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்தவர் இந்துஜா. சமீபத்தில் வெளியான நானே வருவேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் “நான் நடித்த படங்களிலேயே மோசமானது பில்லா பாண்டி என்ற படம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தயாரித்து, அவரே நாயகனாகவும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.கே.சுரேஷ் இந்துஜாவின் இந்த கருத்து குறித்து வெளிப்படையாக பேசினார். அவர் பேசியதாவது: நடிகை இந்துஜா நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அந்த நேர்காணலில் இந்துஜாவிடம், 'நீங்கள் நடித்ததிலேயே மோசமான படம் எது?' என கேள்வி கேட்கிறார்கள். அதற்கு அவர், ''பில்லா பாண்டி'' என கூறியிருக்கிறார்.
'பில்லா பாண்டி' படத்தில் நான் தான் அவரை அறிமுகப்படுத்தினேன். அவருக்கு அது தான் முதல் படம். அப்போது தொடர்ந்து 4 படங்கள் என்னுடைய ஸ்டூடியோ 9 தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்தமானார். பில்லா பாண்டி நல்ல கதைக்களம் கொண்ட படம். எனக்கு மிகவும் பிடித்த படம். இந்துஜாவிற்கு அப்படி இருக்க வேண்டும் என அவசியமில்லை.
நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ அதை நான் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஏற்றிய ஏணியை மறந்துவிடக்கூடாது. சினிமா ஒரு பெரிய வட்டம். ஒரு ராட்டினம் போல சுற்றி கீழே வந்துவிடும். அதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.