ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கன்னட திரையுலகில் உருவாக்கி வெளியான கே.ஜி.எப் படத்தின் இரண்டு பாகங்களுக்கு பிறகு ரசிகர்களின் கவனம் அடுத்து வெளியாகும் கன்னட படங்களின் மீது பதிய ஆரம்பித்துள்ளது. அதை தக்கவைக்கும் விதமாக கடந்த வாரம் கன்னடத்தில் வெளியான காந்தாரா என்கிற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ரிஷப் ஷெட்டியே இந்த படத்தை இயக்கியுள்ளார்.
கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை மையப்படுத்தி, பூர்வகுடிகளின் நில உரிமை பற்றி பேசி இருந்த இந்தப்படம் கன்னடத்தில் மட்டுமில்லாது தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. மலையாளத்தில் இந்த படத்தை பிரித்விராஜ் வெளியிட்டுள்ளார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே கன்னடத்தில் இந்த படத்தை பார்த்த பிரபாஸ், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்கள் ரிஷப் ஷெட்டிக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் கார்த்தி சென்னையில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ரிஷப் ஷெட்டியை நேரிலேயே சந்தித்து படம் குறித்து மனம் விட்டு பாராட்டியுள்ளார். தமிழில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.