ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, இந்தாண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், நான்கு மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக, இம்மாதம் 9ம் தேதி விக்னேஷ் சிவன், 'டுவிட்டரில்' பதிவிட்டார். வாடகை தாய் வாயிலாக குழந்தை பிறந்திருப்பதால், உரிய விதிமுறை பின்பற்றப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து விசாரிக்க, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்குனர் தலைமையில், மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் 2016ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. அதேபோல், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ள, பிரபல குழந்தைகள் நல தனியார் மருத்துவமனையில், 2021 டிச., மாதத்தில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் வாயிலாகவே குழந்தை பெற்று எடுத்ததாகவும், விதி மீறப்படவில்லை எனவும், விசாரணை குழுவிடம், நயன்தாரா தரப்பில் வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்து உள்ளதாக தெரிகிறது.