நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த சில ஆண்டுளுக்கு முன்பு மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய கதையம்சம் என்பதால், தமிழ் தெலுங்கு கன்னடம் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் இந்தப்படத்தில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா ஆகியோர் கணவன், மனைவியாக நடிக்க, கண்டிப்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை தபு நடித்திருந்தார். தென்னிந்திய மொழிகளில் பெற்ற வெற்றியை விட இந்தியில் வரவேற்பு குறைந்தாலும், இந்த படத்தை அனைவரும் பாராட்டத் தவறவில்லை.
இந்த நிலையில் கடந்த வருடம் மலையாளத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் திரிஷ்யம் 2 என்கிற பெயரில் வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. இதைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக இந்தப்படம் தெலுங்கில் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஹிந்தியில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்து ரிலீஸுக்கு தயார் செய்துவிட்டார்கள்.
முதல் பாகத்தில் நடித்த அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு ஆகியோருடன் இந்த பாகத்தில் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் நவம்பர் 18ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாக இருக்கிறது. வழக்கு மீண்டும் திறக்கப்படுகிறது என்கிற வாசகங்களுடன் இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.