மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மஞ்சு வாரியர் நடிக்கும் மலையாள படம் ஆயிஷா. இந்த படம் அரபு மொழியிலும் தயாராகி உள்ளது. இந்தப் படத்தில் 70 சதவீதம், இந்தியாவிற்கு வெளியேயுள்ள பிற நாட்டை சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அரபு நாடுகளில் இந்த திரைப்படம் அரபு மொழியில் வெளியாகவிருக்கிறது. சவுதி அரேபியாவில் ஒரு இந்திய திரைப்படம், இத்தகையதொரு கவனத்தை பெறுவது இதுவே முதல் முறை. பிரபுதேவா இந்தப் படத்திற்கு நடனம் அமைத்துள்ளார்.
நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா உள்ளிட்ட இந்திய கலைஞர்களுடன் துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் என பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜெயச்சந்திரன் இசை அமைதிதிருக்கிறார். இந்த திரைப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா தயாரித்திருக்கிறார். இந்தோ -அரேபிய கூட்டுத்தயாரிப்பாக உருவாகியிருக்கும் இந்த படம் சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரேபிய மொழியில் வெளியாகிறது.