நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல பாலிவுட் நடிகை நுபுர் அலங்கர். பல பாலிவுட் படங்களில் குணசித்ரம் மற்று வில்லி வேடங்களில் நடித்துள்ளார். சக்திமான் உட்பட ஏராளமான சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். 49 வயதான நுபுர், சினிமாவில் இருந்து விலகி, சந்நியாசி ஆகி இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.
தற்போது அவர் மதுரா தெருங்களில் பிச்சை எடுக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இனி என் வாழ்க்கையில் சினிமா இல்லை. அனைத்து எதிர்பார்ப்புகளில் இருந்தும் கடமைகளில் இருந்தும் விடுபட்டுவிட்டேன். என வாழ்க்கை முறையை எளிமைப்படுத்திக் கொண்டேன். தினமும் 11 பேரிடம் பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு வாழ்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு நிம்மதியை தருகிறது. என்று அவர் கூறியிருக்கிறார்.