நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவியின் 'செந்தூரப்பூவே' தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரியானார் ஸ்ரீநிதி. நன்றாக சென்று கொண்டிருந்த அந்த தொடரானது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக முதலில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் ஒளிபரப்பாக ஆரம்பித்த போது மக்கள் மத்தியில் அந்த தொடருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அந்த சீரியல் முடித்து வைக்கப்பட்டது. அதேசமயம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியிருந்த ஸ்ரீநிதிக்கு விஜய் டிவியிலேயே புதிய சீரியலில் வாய்ப்பு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்குபிறகு வந்த புது சீரியல்களில் கூட வேறு ஹீரோயின்களே கமிட்டாகியிருந்தனர்.
இந்நிலையில் தான் ஸ்ரீநிதி ஜீ தமிழ் நிகழ்ச்சிக்கு தாவினார். இப்போது அந்த சேனலின் பிரபல நடன நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார். இதனையடுத்து ஸ்ரீநிதி தற்போது அதே சேனலில் மிக விரைவில் வெளியாகவுள்ள 'தெய்வம் தந்த பூவே' தொடரின் சீசன் 2 வில் ஹீரோயினாக நடிக்கிறார். முன்னதாக முதல் சீசனில் நிஷ்மா செங்கப்பா ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ஸ்ரீநிதி மாற்றப்பட்டுள்ளார்.