நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு ஜனவரியில் பொங்கல் தினத்தன்று திரைக்கு வருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது அஜித் நடித்துள்ள துணிவு படமும் பொங்கலுக்கு திரைக்கு வரப்போவதாக செய்திகள் வெளியானபோதும் இதுவரை அந்த செய்தியை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நேரத்தில் தற்போது திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அது குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகயிருக்கும் தகவல் உண்மைதான். இதில் அஜித்தின் துணிவு படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதியும் , விஜய்யின் வாரிசு படம் ஜனவரி 13ஆம் தேதியும் வெளியாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானபோதும் இரண்டு படங்களுக்குமே சமமான அளவு திரையரங்கங்கள் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் கடைசியாக விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் 2014 ஆம் ஆண்டு ஒரே நாளில் மோதிய நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வாரிசு, துணிவு படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன.