நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மணிரத்னம் இயக்கி கடந்த 30ம் தேதி திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படம் இதுவரை 400 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அடுத்து ரூ.500 கோடியை கடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் சிறிய பழுவேட்டரையராக நடித்த பார்த்திபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், பொன்னியின் செல்வன் படம் 400 கோடியை கிராஸ் பண்ணி விட்டது. இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம் மாறிவிட்டது. இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சினையை எழுப்பலாம். எழுப்பினால் இன்னும் ஒரு 100 என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படம் வெளியான போது ராஜராஜ சோழன் இந்துவா? இந்து மதம் இல்லையா? என்பது குறித்து சர்ச்சைகள் எழுந்தது. இயக்குனர் வெற்றிமாறன் அது குறித்து கருத்து வெளியிட்ட நிலையில் கமல்ஹாசனும் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.