நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஒரு சிறிய கன்னடப் படம் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படி வெளியானதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது 'காந்தாரா' படத்தின் சென்னை வெளியீடு. ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கன்னடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், விமர்சனமும் பெற்ற படம் 'காந்தாரா'. கன்னடத்தில் சில மாதங்களுக்கு முன்பு தயாராகி வெளிவந்த 'கேஜிஎப் 2' படத்தைத் தயாரித்த ஹாம்பாலே பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
கன்னட மொழியில் தமிழகத்தில் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று ஹிந்தி, தெலுங்கிலும், நாளை தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி தமிழ்த் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் சில காட்சிகளுக்கான முன்பதிவுகளும் சிறப்பாகவே நடைபெற்று வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் இந்த படத்தை பார்க்க முடியும் என்பது அதியம் தான். எந்த ஒரு கன்னட படத்திற்கும் இதற்கு முன்பு இப்படி நடத்திருக்குமா என்பது சந்தேகமே.