ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனது படங்கள் மூலமோ அல்லது மேடைகளில் பேசும் கருத்துக்கள் மூலமாகவோ தெரிந்தோ தெரியாமலோ சில விஷயங்களை பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். அதன் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியான அவரது லால் சிங் சத்தா என்கிற படத்தை கூட புறக்கணிக்க வேண்டும் என அந்த சமயத்தில் சோசியல் மீடியாவில மிகப்பெரிய பிரசாரம் நடந்தது. நிலைமை இப்படி இருக்க, தற்போது நிதி நிறுவனம் ஒன்றின் விளம்பர படத்தில் நடித்துள்ள ஆமிர்கான், அதில் பேசியுள்ள வசனம் இப்போது சர்ச்சையை கிளப்பி அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.
ஆமிர்கான் மற்றும் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ள அந்த விளம்பரப் படத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு மணமகன் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது மணமகள் ஹிந்து மத சம்பிரதாயங்களின்படி அந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும். இந்த சமயத்தில் ஆமீர்கான் குறுக்கிட்டு எதற்காக காலங்காலமாக இருக்கும் சில நடைமுறைகளை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் தான் வங்கி நடைமுறைகள் ஒவ்வொன்றையும் நாங்கள் கேள்வி கேட்க வேண்டி இருக்கிறது.. என்று கூறுகிறார். இது ஹிந்துமத உணர்வாளர்கள் மனதை புண்படுத்துவதாகவும் அவர்களது பாரம்பரிய வழக்கங்களை கிண்டல் செய்வதாகவும் அமைந்துள்ளதாக எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.
இதுபோன்ற சென்சிட்டிவான விஷயங்களில் உடனடியாக தலையிட்டு எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்யும் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா என்பவர் ஆமிர்கானுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த விளம்பர படத்தில் ஹிந்து மரபுகளை தவறாக விமர்சித்து உள்ளதாக எனக்கு புகார் வந்துள்ளது. விளம்பரத்தைப் பார்க்கும்போது அது எதேச்சையாக நடந்ததாக கருத முடியவில்லை. ஆமீர்கான் போன்றவர்கள் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதற்கு முன்பாக ஹிந்துமத மரபுகளையும் பாரம்பரியத்தையும் குறித்து நன்கு தெரிந்துகொண்டு அதன் பிறகு நடிக்க வேண்டும். இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக ஆமீர்கான், கியாரா அத்வானி மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆகியவை மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.