நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மார்வெல் ஸ்டூடியோவின் சூப்பர் ஹீரோக்கள் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு பிளாக் பேந்தர் என்ற சூப்பர் ஹீரோ படம் வெளியானது. முதன் முதலா கருப்பினத்தை சேர்ந்தவர் சூப்பர் ஹீரோவாக நடித்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் 'பிளாக் பேந்தர்: வகாண்டா ஃபார்எவர்' என்ற பெயரில் ரையான் கூக்லர் இயக்கத்தில் தயாராகி உள்ளது.
முதல் பாகத்தில் சூப்பர் ஹீரோ தங்கள் இனத்தவர் வாழ வகாண்டா என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இந்த பாகத்தில் வகாண்டா சாம்ராஜ்யத்தை வல்லரசுகள் இணைந்து வீழ்த்த பார்க்கிறது. அதனை சூப்பர் ஹீரோயின் எப்படி முறியடிக்கிறார் என்கிற கதை.
இந்த பாகத்தில் சூப்பர் ஹீரோ இல்லை, சூப்பர் ஹீரோயின். வகாண்டா நாட்டின் ராணியாக ஆஞ்சலா பாஷ்ட்டும், சூப்பர் ஹீரோயினாக லடிஷா ரைட்டும் நடித்திருக்கிறார்கள். படம் வருகிற நவம்பர் மாதம் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.