நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன், இயக்குனர் மணிரத்தினத்தின் மிகப்பெரிய முயற்சியால் தற்போது திரைப்படமாக வடிவெடுத்து, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. எதிர்பார்த்தபடி இந்த படத்திற்கு தமிழக மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நாவலை கடந்த பல வருடங்களுக்கு முன்பிருந்தே படித்து ரசித்த அதன் வாசகர்கள் இந்த கதை எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்பதற்காகவே தியேட்டர்களுக்கு வருகிறார்கள்.
அதேசமயம் இந்த படத்தின் காட்சிகளை படமாக்கிய மணிரத்னம் எடிட்டிங் டேபிளில் அதன் ஒன்லைன் ஆர்டர் வரிசையை அப்படியே கலைத்துப்போட்டு புது வடிவம் கொடுத்தார் என்று இந்த படத்தின் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் சில புதிய தகவல்களை கூறியுள்ளார்.
அதாவது மற்ற படங்களில் வழக்கமாக இடம்பெறுவது போலவே படத்தில் உள்ள கதாநாயகர்கள், கதாநாயகிகளை வரிசையாக அறிமுகப்படுத்தும் விதமாக தான் முதலில் அவர் ஒன்லைன் ஆர்டர் எழுதி இருந்தாராம். ஆனால் அதன்பிறகு கதை துவங்கும்போதே, ஒரு கதைசொல்லியின் உதவியுடன் படத்தை துவங்க வேண்டி இருந்ததால், ஆரம்பத்தில் விக்ரமின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை மட்டும் முதலில் அறிமுகப்படுத்தி ஆன்லைன் ஆர்டரில் காட்சிகளின் வரிசையை மாற்றினாராம் மணிரத்னம்.
அதுமட்டுமல்ல குந்தவை கதாபாத்திரத்திற்கு என தனி அறிமுக காட்சி வைக்காமல், வந்தியத்தேவன் கதாபாத்திரம் அவரை சந்திக்கும்போது நேரடியாக அவரை அறிமுகப்படுத்துவதாகவும் மணிரத்னம் மாற்றினாராம். மேலும் இந்த கதைக்கு இடைவேளை விடுவதற்கு என எந்த ஒரு குறிப்பிட்ட காட்சியும் இல்லாததால் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தின் பிளாஷ்பேக் காட்சியில் இடைவேளை விடும் முடிவையும் எடிட்டிங்கின்போது தான் மணிரத்னம் எடுத்தார் என்றும் கூறியுள்ளார் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.