நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிக்பாஸ் சீசன் 5, டைட்டில் வின்னர் ராஜூ முதல் ப்ரியங்கா, அமீர்-பாவ்னி என பல பிரபலங்களை உருவாக்கியுள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த லக்கும் வொர்க் அவுட் ஆனது தாமரைக்கு தான் என்றே சொல்ல வேண்டும். பிக்பாஸ் ஜோடிகள் 2 முடிந்த கையோடு தாமரை வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் ரோபோ ஷங்கர் மற்றும் சிங்கம் புலியுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதன்பிறகு வையாபுரியுடன் மலையால மூவி என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், நடிகர் சரத்குமார் நடிக்கும் 'ஆழி' படத்திலும் தாமரை கமிட்டாகியுள்ளார். ஆழி படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் தனது கெட்டப்பையும் ரிவீல் செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் தாமரை. தாமரையின் இந்த படிப்படியான வளர்ச்சிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.