நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகர்கள் அர்னவ் - திவ்யா ஸ்ரீதர் விவகாரம் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அர்னவ் தனக்கு துரோகம் செய்வதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அண்மையில் திவ்யா ஸ்ரீதர் போலீஸ் புகார் கொடுத்திருந்தார். இதனையடுத்து அதற்கு பதில் அளித்த அர்னவ், ஊடகங்களில் திவ்யாவுக்கு மனநிலை சரியில்லை. என்னை மிரட்டுகிறார் என கூறி வருகிறார்.
இந்நிலையில், அர்னவின் முகமூடியை கிழித்து அவர் உண்மை முகத்தை காட்டும் ஆடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்யாணப் பரிசு 2 தொடரில் நடித்த ரிஹானா என்ற நடிகையுடன் அர்ணவ் தொலைபேசியில் பேசும் உரையாடலில், 'ஹன்சிதாகிட்ட நான் உன்கிட்ட தப்பா நடந்ததா சொன்னியா?' என்று கேட்கிறார். அதற்கு ரிஹானா, 'நீ உன் ப்ளாட்டுக்கு என்ன கூப்பிடல? அப்பார்ட்மெண்ட்ல யாரும் இல்லன்னு சொல்லல?. நீயும் திவ்யாவும் இருக்கும் போது என்னை கூப்பிட்டிருந்தா நான் வந்திருப்பேன். ஆனா, நீ என்னை அப்படியா கூப்பிட்ட?. அப்பார்ட்மெண்ட்ல யாரும் இல்ல. உன்னை யாரும் கேள்வி கேட்கமாட்டாங்க. நான் என்ன உன்னை கடிச்சா திங்கப் போறேன். உன் அனுமதி இல்லாமல் என் விரல் கூட உன் மேல படாதுன்னு சொன்னியே. நீ கூப்பிடறதா வச்சே நீ என்ன எதுக்காக கூப்பிடறேன்னு தெரிஞ்சு தான் நான் வரல. உன்னை நான் நல்லவன்னு நினைச்சேன். திவ்யாவுக்கு துரோகம் பண்ணாத. கர்ப்பிணி பாவம் உன்ன சும்மா விடாது' என்று எச்சரித்து பேசியுள்ளார்.
அந்த ஆடியோவானது இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.