Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமா - மாற்றத்தை ஏற்றுக் கொண்ட சீனியர் ஹீரோக்கள்

12 அக், 2022 - 10:48 IST
எழுத்தின் அளவு:
Senior-heros-accepted-the-changes-in-Tamil-cinema

இந்திய சினிமாவில் 60 வயதைக் கடந்த சீனியர் ஹீரோக்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்னும் 30 பிளஸ் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். படங்களில் அவர்களுக்குக் கல்யாணம் ஆகாமல் இருப்பது, ஜோடியாக நடிக்கும் இளம் ஹீரோயின்களைக் காதலிப்பது ஆகியற்றையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த 2022ல் இந்திய சினிமா பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. தியேட்டர்களுக்கு வரும் மக்களின் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது. 'பொன்னியின் செல்வன்' மாதிரியான படங்களுக்குத்தான் மிக அபூர்வமாக வயதானவர்களும் தியேட்டர்கள் பக்கம் வந்தார்கள். அதே சமயம் மற்ற சீனியர் ஹீரோக்களின் படங்களைப் பார்க்க இளம் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை.



கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படம் ஓடியதே என சிலர் கேட்கலாம். தமிழ் சினிமாவில் தனி திறமைசாலியாக அடையாளம் காட்டப்பட்ட கமல்ஹாசன் தனது தற்போதைய நட்சத்திர அந்தஸ்தை உணர்ந்துதான் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார். இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் தன்னை அவரிடம் ஒப்படைத்துவிட்டார். அதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கான முதன்மைக் காரணம். இதை கமல்ஹாசன் கூட மறுக்க மாட்டார். இதற்கு முன்பு கமல்ஹாசன் நடிக்கும் படம் என்றால் அதில் அவரின் தலையீடு அதிகம் இருக்கும் என்று திரையுலகத்தில் சொன்னவர்கள்தான் அதிகம். இன்றைய ரசிகர்களின் மனநிலை அறிந்தே கமல்ஹாசன் தன்னை மாற்றிக் கொண்டு அவருடைய 60 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் பெரும் வசூலை 'விக்ரம்' படம் மூலம் பெற்றார்.



அவரது வழியில்தான் தற்போது ரஜினிகாந்தும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். 'கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட்' ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரஜினி இப்படி மாறியதற்கு கடந்த தீபாவளிக்கு வெளிவந்த 'அண்ணாத்த' படத்தின் தோல்வியும் ஒரு காரணமாக இருக்கலாம். இதற்கு முன்பு சில தோல்விப் படங்களில் அவர் நடித்த போது கூட பெரிய கிண்டல்கள் எழவில்லை. ஆனால், 'அண்ணாத்த' படத்தை வைத்து பல மீம்ஸ்கள் வெளிவரும் அளவிற்கு அந்தப் படத்தின் ரிசல்ட் இருந்தது.



70களின் பிற்பகுதியில் கதாநாயகர்களாக அறிமுகமாகி இன்றும் கதாநாயகர்ளாக நடித்து வருபவர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும். அவர்களுக்குப் பின் 80களில் கதாநாயகர்களாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சத்யராஜ், சரத்குமார், பிரபு ஆகியோர் சினிமாவில் நடந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அதற்கேற்றபடி தங்களை மாற்றிக் கொண்டார்கள். அதனால்தான் இப்போதும் பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தங்களது நடிப்புப் பயணத்தை விடாமல் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களது கால கட்டங்களில் அறிமுகமான சில ஹீரோக்கள் தற்போது நடிப்பதிலிருந்து ஒதுங்கிவிட்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டார்கள்.



இயக்குனராகவும் இருப்பதால் தனக்கான கதைகளை, கதாபாத்திரங்களை உருவாக்கி, அந்தப் படங்களையும் எப்படி புதுமையாகக் கொடுக்க முடியுமோ என யோசித்து 'ஒத்த செருப்பு, இரவின் நிழல்' என ஒரு பக்கம் இயக்குனராகவும், மற்றொரு பக்கம் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என எது வந்தாலும் பொருத்தமாக இருந்தால் ஏற்று நடித்து வருகிறார் பார்த்திபன். அவர் காலத்தில் இயக்கம் பிளஸ் நடிப்பு என வந்தவர்கள் இப்போது முகவரியைத் தொலைத்து நிற்கிறார்கள்.



90களின் துவக்கத்தில் அறிமுகமாகி 'ரோஜா' படம் மூலம் அந்தக் கால இளம் பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. 90களிலேயே அவர் கதாநாயகனாக நடித்து வெற்றிப் படங்களாக அமைந்தவை என்று பார்த்தால் 'மறுபடியும், பாம்பே, இந்திரா' என சில படங்கள் மட்டும்தான். இடையில் பல வருடங்கள் சினிமாவை விட்டே ஒதுங்கி இருந்தவர் மீண்டும் 'கடல்' மூலம் வந்து 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்து இப்போது மீண்டும் தனி கதாநாயகனாகவும், வில்லன், குணச்சித்திரம் எனவும் நடித்து வருகிறார்.

90கள், 2கே வருடங்களில் அறிமுகமாகி, பிரபலமாகிய சில ஹீரோக்கள் இப்போது வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருக்கும் காலத்தில் 70, 80களில் பிரபலமாக இருந்தவர்கள் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தங்களையும் மாற்றிக் கொண்டதால்தான் இந்த 2022லும் தங்கள் திரைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை இன்றைய சில டாப் ஹீரோக்கள் முன்னுதாரணமாய் எடுத்துக் கொள்ள வேண்டும். தாங்கள் விரும்பிய துறைகளில் நீண்ட காலம் பயணிக்க விரும்பும் பலருக்கும் கூட இது ஒரு பாடம்தான்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மாலத் தீவிலிருந்து திரும்பிய ராஷ்மிகாமாலத் தீவிலிருந்து திரும்பிய ... ஷங்கர் - ராம் சரண் படம் : அம்மா கதாபாத்திரத்தில் அஞ்சலி ஷங்கர் - ராம் சரண் படம் : அம்மா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
14 அக், 2022 - 01:44 Report Abuse
.Dr.A.Joseph ஒவ்வொரு நடிகனுக்கும் பத்து ரசிகன் இருப்பான் என்றும் அவனை வைத்து படம் எடுத்தால் நல்ல லாபம் அடையலாம் என நினைத்து படம் எடுப்பது ரசிகனுக்கு தெரியாமல் இல்லை மணிரத்தினம்?
Rate this:
Alex - Bangalore,இந்தியா
13 அக், 2022 - 22:33 Report Abuse
Alex நடுல வந்த கதாநாயகிகளே நடிச்சு நாலு காசு பாத்துட்டு, கல்யாணம் பண்ணிக்கிட்டு கப்புசிப்புனு செட்டில் ஆயிட்டாங்க. அதான் அவங்கள பாத்து இவங்களும் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்களோ என்னவோ?
Rate this:
nizamudin - trichy,இந்தியா
13 அக், 2022 - 11:46 Report Abuse
nizamudin ஒருவரை ஒருவர் ஆதரித்து காலம் இது விக்ரம் வெற்றியில் பாஹ்ட் பாசில் வ சேதுபதி சூர்யா அனிருத் முக்கிய பங்காளிகள் ஆவார்கள் /அரசியலாகட்டும் மதமாகட்டும் எல்லோரும் சேர்ந்து வாழ இறைவன்மார்கள் கட்டளை இன்று / இல்லையென்றால் எல்லாமே கோவிந்தா கோவிந்த தான்
Rate this:
பழனி - Madurai,இந்தியா
13 அக், 2022 - 08:38 Report Abuse
பழனி இருந்தாலும் நீங்க ஒரு மாபெரும் நடிகனை பற்றி பேசாதது எங்களுக்கு ஒரே ஏமாற்றமா இருக்கு. பொறாமையால எங்க உதன்னாவ பத்தி நீங்க ஒண்ணுமே பேசல்ல.
Rate this:
Alex - Bangalore,இந்தியா
13 அக், 2022 - 22:34Report Abuse
Alexஇங்க நடிக்க தெரிஞ்ச நடிகர்களை பத்தி மட்டும் சொல்லிருக்காங்க சார்....
Rate this:
Karthikeyan K Y - Chennai,இந்தியா
13 அக், 2022 - 07:54 Report Abuse
Karthikeyan K Y ரஜினி காரோண காலத்தில் பாவம் பரம ஏழை ஆதலால் மண்டபத்திற்கு சொத்து வரி கட்ட முடியாமல் கோர்ட்டுக்கு சென்றார் விஜய் நேர்மை உண்மை என்று சினிமாவில் நடித்து தன் காருக்கு வரி கட்ட முடியாமல் கோர்ட்டுக்கு சென்றார் சூர்யா வோட்டு போட சொல்லி தேர்தல் ஆணையத்திடம் காசு வாங்கி நடித்து வோட்டு போடு அன்றும் கூடுமா சுற்றுலா அமெரிக்காவிற்கு சென்றார் இவர்கள் பொருளாதாரம், விஞ்ஞானம், விளையாட்டு, அறிவியல் கல்வி, மருத்துவம், தொழில் துறை, உல் துறை, போன்று எந்த துறையில் வேண்டுமானாலும் பேசுவார்கள் - பிதற்றி ஊரை ஏமாற்றுவார்கள், மக்கள் என்று சென்று படம் பார்ப்பதை நிறுத்தி விட்டு தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள் நடிப்பு ஒரு தொழில் ஆக இருக்கும் இன்று சம்பளம், வரிஏய்ப்பு விதம் விதமான விலை உயர்ந்த பொருட்கள், கார்கள், பேசுவது பாருங்கள்
Rate this:
13 அக், 2022 - 15:14Report Abuse
ஆரூர் ரங்ராகவேந்திரா மண்டபம் ஒரு அறக்கட்டளையின் சொத்து என்கிறார்கள். அதனுடைய🥲 வருமானம் பல தர்ம காரியங்களுக்கு செலவாகிறது. அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக செயல்படாமல் மூடப்பட்டிருந்த காலத்திற்கு கூடுதல் வரிவிதித்தால் அறக்கட்டளை எதிர்க்கவே கூடாதா?...
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in