விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |
பேசும் படம், மைக்கேல் மதன காமராசன், அபூர்வ சகோதரர்கள், மும்பை எக்ஸ்பிரஸ். காதலா காதலா, மகளிர் மட்டும் படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். கமலின் ஆஸ்தான இயக்குனர். 80 வயதை கடந்த சிங்கீதம் இப்போது வெல்கம் ஒபாமா என்ற தெலுங்கு படத்தை இயக்குகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை ஒரு கிராமத்து மக்கள் தங்கள் கிராமத்துக்கு விருந்தினராக வந்து ஒரு வாரம் தங்கி இருக்க வேண்டும் என்று கடிதம் எழுதி அழைப்பு விடுக்கிறார்கள். அதை ஏற்று அந்த கிராமத்துக்கு வருகிறார் ஒமாபா. ஒரு வாரம் கிராமத்தில் ஒபாமா படுகிற அவஸ்தையை காமெடியாக சொல்லும் கதையாம். நடிகர் நடிகைகளை தேடி வருகிறார் சிங்கீதம் அவரது நண்பர் கமல் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. மும்பையிலும், ஐதராபாத்திலும் படப்பிடிப்பு நடக்கிறது. தமிழில் டப்செய்து வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார் சிங்கீதம்.