இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தமிழில் சாட்டை படத்தில் அறிமுகமானவர் மகிமா நம்பியார். பின்னர் அசுரகுரு, மகாமுனி, ஓ மை டாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரத்தம் என்ற படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்து வருகிறார். இதனை சி.எஸ்.அமுதன் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு முடிந்து வாகனத்தின் திரும்பும்போது களைப்பால் மகிமா நம்பியார் அசந்து தூங்கியுள்ளார். வாயை திறந்தபடி அவர் தூங்கும் காட்சியை படம் எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். “ரத்தம் டீமின் கடும் உழைப்பு” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவை மகிமா நம்பியாருக்கு டேக் செய்துள்ளார்.
மகிமா நம்பியார் இந்தப் பதிவை பார்த்து "அய்யோ அசிங்கம், அவமானமாக போச்சு இனி நான் இந்தியா பக்கமே திரும்ப மாட்டேன்” என பதிவிட்டுள்ளார். மகிமா சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் “அவருடைய போட்டோவை பார்க்கும்போது என் போட்டோவை பார்ப்பது போல் உள்ளது” என விஜய் ஆண்டனி கூறி உள்ளார்.