நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்சன் திரைப்படம் மூலமாக தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. அதன்பிறகு ஜகமே தந்திரம், கேப்டன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்கிற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் ஐஸ்வர்யாராய், திரிஷா ஆகியோரின் கதாபாத்திரங்களுக்கு இணையாக இவரது கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு கிடைத்துள்ள திடீர் வெளிச்சத்தையும் வரவேற்பையும் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துவரும் படங்களை அடுத்தடுத்து வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா லட்சுமி கதையின் நாயகியாக நடித்துள்ள அம்மு என்கிற வெப்சீரிஸ் வரும் அக்டோபர் 19ம் தேதி ஓடிடி தளத்தில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. அதேபோல மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் தயாரிப்பில், ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள குமரி என்கிற படம் அக்டோபர் 28ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.