நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. அந்த படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்து வந்தாலும், வரலாறு தெரியாத இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றை அறிமுகம் செய்து வைக்கும் பணியை வெற்றிகரமாக செய்துள்ளது என்றே கூறலாம். அத்துடன், இந்த படத்தின் தாக்கத்தை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் உட்பட சாமானியர்கள் வரை வரலாற்று கதாபாத்திரங்களை ரீகிரியேட் செய்யும் வகையில் மேக்கப் போட்டு போட்டோஷூட் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஜீ தமிழ் நடிகையான அக்ஷயா கிம்மி, நந்தினி கெட்டப்பில் சூப்பரான புகைப்படத்தை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். தற்போது அவருடன் சக நடிகையான ஸ்வேதா சுப்பிரமணியனும் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் நந்தினியாக அக்ஷயா கிம்மியும், குந்தவையாக ஸ்வேதாவும் கெட்டப் போட்டுள்ளனர். பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் பாராட்டுகள் குவிந்து வருகிறது.