நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி, சல்மான்கான் நடிப்பில் வெளியான காட்பாதர் திரைப்படம் வெற்றியை பெற்றுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் என்கிற பெயரில் வெளியான இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி அழகாக ரீமேக் செய்து இயக்கியுள்ளார் இயக்குனர் மோகன்ராஜா. இதனால் தெலுங்கு திரையுலகில் மோகன்ராஜாவுக்கு மவுசு அதிகரித்து இருப்பதுடன். ரசிகர்களும் அவரை புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தையும் மோகன்ராஜா இயக்கவுள்ளார் என்கிற செய்தி சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் ராம்சரண் நடிக்க துருவா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கியிருந்தார். தமிழ் அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் டீசன்டான வெற்றியை அந்த படம் பெற்றது.
இந்த நிலையில் தற்போது காட்பாதர் படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவா இரண்டாம் பாகத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. காட்பாதர் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான என்.வி.பிரசாத் இந்த இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.