மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழில் சிம்பு ஹீரோவாக அறிமுகமான காலகட்டத்தில் அவர் நடித்த குத்து படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா என்கிற ரம்யா. அந்த படத்திற்கு பிறகு குத்து ரம்யா என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தொடர்ந்து அர்ஜுனுடன் கிரி, தனுசுடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்தவர், தமிழில் கடைசியாக சிங்கம் புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கர்நாடக மாநிலத்தில் இருந்து பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு 5 வருடங்கள் எம்.பி.,யாக பொறுப்பு வகித்தார்.
அந்த சமயத்தில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடைசியாக 2016ல் பிரபல தெலுங்கு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா முதன்முதலாக கன்னடத்தில் இயக்கிய, அவரது திரையுலக பயணத்தில் கடைசி படமாக அமைந்த நகரஹவு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரம்யா. இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார் ரம்யா. அவர் நடிக்கும் படத்திற்கு ரவிச்சந்திரன் படத்தின் ஹிட் பாடலான ‛சுவாதி முத்தின மலஹனியே' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராஜ் பி.ஷெட்டி இயக்குகிறார். இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் தானும் ஒருவராக இணைந்துள்ளார் ரம்யா..