ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா நடிக்கும் படம் "என்றென்றும் புன்னகை". அஹமத் என்ற புதுமுகம் இயக்குகிறார். இதில் ஆண்டரியா ஒரு விளம்பர மாடலாக நடிக்கிறார் என்றும், அவர் ஓவியக் கல்லூரி மாணவர்களுக்காக நிர்வாணமாக போஸ் கொடுக்கும் காட்சியில் நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி படத்தின் இயக்குர் அஹமது அளித்துள்ள விளக்கம்: நட்பை பற்றி பல படங்கள் வந்தாச்சு. இதுல நான் புது நட்பை சொல்லியிருக்கேன். ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனா இதுல ஜீவா கல்யாணம் பண்ணிக்காம இருக்குறதுக்கு ஒரே காரணம் நண்பர்கள் பிரிஞ்சு போயிடுவாங்க என்பதுதான். அப்புறம் எப்படி அவர் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார், காதல்ல விழுறார்ங்றதுதான் படம். த்ரிஷா ஜீவாவோட லவ்வரா வர்றாங்க.
சென்னையில வாழ்ற மிடில் கிளாஸ் பொண்ணு. ஆண்ட்ரியா பேஷன் ஷோ மாடல். மேடையில ஒய்யாரமா நடந்து வந்து அழகு காட்டுற மாடலுங்க வாழ்க்கைக்கு பின்னால இருக்குற யதார்த்த்தை சொல்லுற கேரக்டர். அவர் நிர்வாணமாக நடிச்சிருக்காருங்கறதெல்லாம் உண்மை இல்லை. அவரோட ஸ்கின் கலர்ல ஒரு டிரஸ் போட்டு மேடையில கேட் வாக் பண்ற மாதிரி ஒரு சீன் வைக்க முடிவு பண்ணியிருந்தோம். அதை ரிகல்சல் பண்ணி பாக்குறப்போ நேர்ல அழகா இருந்தாலும், ஸ்கிரீன்ல வேற மாதிரி தெரிஞ்சுது. அதனால அந்த சீனை எடுக்கல. இதைத்தான் இப்படி கதையா கிளப்பிட்டாங்க என்றார்.