ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன்'.
இப்படத்திற்கு அமெரிக்க வாழ் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு ஒரு நாள் முன்னதாக ப்ரீமியர் காட்சிகளும் நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 4 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள வினியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 4 மில்லியன் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32 கோடியே 40 லட்சம் ரூபாய்.
அமெரிக்காவில் இதுவரையில் வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூலை பெறப் போகும் படம் என்ற சாதனையும் இப்படம் நிகழ்த்தும் என்றும் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவில் மட்டுமல்லாது ஒரு சில வெளிநாடுகளிலும் இப்படத்தின் வசூல் முந்தைய சில தமிழ்ப் படங்களின் வசூலை மிஞ்சி வருகிறதாம்.
உலக அளவில் கடந்த மூன்று நாட்களின் வசூல் 200 கோடியைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் இப்படத்தின் வசூல் 500 கோடியைக் கடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.