500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆதி புருஷ்'. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது.
இப்படத்தின் டீசர் நேற்று ராமர் பிறந்த இடமான அயோத்தியில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. படத்தை மோஷன் கேப்சரிங் முறையிலும் உருவாக்கியுள்ளார்கள். பிரபாஸ், கிரித்தி, சைப் அலிகான் ஆகியோரது கதாபாத்திரங்கள் நிஜமாக நடிக்கப்பட்டும், மற்ற கதாபாத்திரங்கள் அனிமேஷன் வகையிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்து தமிழில் இதற்கு முன்பு வெளிவந்த 'கோச்சடையான்' படம் போல இப்படம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால், படக்குழுவினர் 'ஆதி புருஷ்' என்ன வகை தொழில்நுட்பப் படம் என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் டீசருக்கு யு டியுபில் அதிகமான பார்வைகள் கிடைத்து வருகிறது.
ஹிந்தி டீசர் 27 மில்லியன் பார்வைகளை 12 மணி நேரத்திற்குள்ளாகப் பெற்றுள்ளது. அதே சமயம் தெலுங்கு டீசர் 2 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. தமிழ் டீசர் 2 மில்லியன், மலையாள டீசர் 4 லட்சம் , கன்னட டீசர் 1 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது.
அதே சமயம் டீசரைப் பற்றி நேற்று வெளியானது முதலே சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கருத்துக்கள் பல்வேறு விதமாக உள்ளன. குழந்தைகளுக்கான கார்ட்டூன் படம் போல இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.