நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் பிசியான நடிகையாகி உள்ளார். தற்போது அமிதாப்பச்சனுடன் 'குட் டே', ரன்பீர் கபூருடன் ‛அனிமல்', தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ‛புஷ்பா -2' படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமான 'கீதாகோவிந்தம்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் ‛டியர் காம்ரேட்' படத்தில் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. அப்போது இருந்து இருவரும் காதலிப்பதாக செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அதற்கு இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா உடனான காதல் வதந்தி குறித்த கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தபோது ‛இது ஒரு கியூட் வதந்தி' என்று கூறியுள்ளார்.