நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

உலகப்புகழ் பெற்ற காளிதாசின் 'அபிஞான ஷாகுந்தலம்' எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்படும் படம் 'ஷாகுந்தலம்'. இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு ஏற்கெனவே அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது படத்தை 3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கி வருவதால் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் தான் வெளிவரும் எனறு தெரிகிறது.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ”மக்கள் அனைவரும் இப்படத்திற்கு தங்கள் அன்பு மற்றும் ஆதரவை குவித்த வண்ணம் உள்ளனர். புராதன கதையை இன்னொரு பரிமாணத்தில் காண்பதற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தை மேலும் மெருகேற்றும் விதமாகபடத்தை 3டி தொழில்நுட்பத்திலும் உருவாக்கி வருகிறோம். இதனால் வெளியீட்டு தேதி சற்று தள்ளிப்போகும்” என்று குறிப்பிடபட்டுள்ளது.
இந்த படத்தில் சமந்தா 'ஷகுந்தலையாகவும்', தேவ் மோகன், 'ராஜா துஷ்யந்தனாகவும்' நடித்துள்ளனர். இவர்கள் தவிர சச்சின் கேடேகர், கபீர் பேதி, டாக்டர் எம். மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதீ பாலன், அனன்யா நாகலா உள்பட பலர் நடித்துள்ளனர். குணசேகரன் இயக்குகிறார்.