நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவின் பெருமையாக இன்று வெளிவந்திருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் அமைந்துள்ளதாக காலைக் காட்சிகளைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சில தெலுங்கு ஊடகங்களும், சில தெலுங்கு ரசிகர்களும் 'பொன்னியின் செல்வன்' படம் பற்றி சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ்வான கமெண்ட்டுகளைப் பரப்பி வருகின்றனர்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படத்துடன் 'பொன்னியின் செல்வன்' படத்தை ஒப்பிட்டுப் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 'பாகுபலி' படம் ஒரு கற்பனைக் கதை, அதை படமாக்குவதற்கு வசதியாக, எளிதாக எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் படமெடுக்கலாம். ஆனால், 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதை 70 வருடங்களுக்கு முன்பு கல்கி எழுத்தில் கற்பனையும், உண்மையும் கலந்து எழுதப்பட்ட வரலாற்றுக் கதை. அதை சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றி படமாக்க முடியாது. அந்த வித்தியாசம் கூடத் தெரியாமல் சில தெலுங்கு ரசிகர்கள் பேசி வருவதாக தமிழ் ரசிகர்கள் பதில் கொடுத்து வருகிறார்கள்.
மணிரத்னம் 'பாகுபலி' படம் போல விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் ஆகியவை இல்லாமல் நிஜமான இடங்களில் 'பொன்னியின் செல்வன்' படத்தை எடுத்து தன்னை ஒரு சிறந்த கிரியேட்டர் என மீண்டும் நிரூபித்துள்ளதாக தமிழ் சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இன்று காலை முதலே பாகுபலி, ராஜமவுலி என டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பெற்று தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மோதல் ஆரம்பமாகியுள்ளது.