நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கில் தயாராகி தமிழிலும் டப்பிங் படமாக வெளியாகிய 'சீதாராமம்' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர் மிருணாள் தாக்கூர். தனது முதல் தெலுங்குப் படத்திலேயே தென்னக ரசிகர்களைக் கவர்ந்துவிட்டார்.
இதற்கு முன்பு மராத்தி படங்கள், டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மிருணாள். அவரது இன்ஸ்டா பக்கங்களில் இதற்கு முன்பு பல கிளாமர் போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன. 'சீதா ராமம்' படத்தில் நடிக்க ஆரம்பித்த பின் அவற்றைக் குறைத்திருந்தார். படம் வெளிவந்து அவர் இங்கு பிரபலமானதுமே மிருணாளின் பழைய கிளாமர் புகைப்படங்களைத் தேடிப் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள்.
ஆனால், இப்போது மிருணாளே மீண்டும் கிளாமர் போட்டோ ஷுட் ஒன்றை நடத்தி அப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவை ரசிகர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.