நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கர்நாடகத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதி திலக்ராஜின் மகன் ஜெயித்கான் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் நடித்திருக்கும் படம் பனாரஸ். ஜெயதீரா இயக்கி உள்ளார். ஜெயித்கானுக்கு ஜோடியாக சோனல் மாண்டீரா நடித்துள்ளார். இவர் துளு மற்றும் கன்னட மொழிகளில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரின் மகன் தான் ஹீரோ என்பதால் படத்தின் விளம்பரங்களில் ஹீரோ ஜெயித் கான் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார். இது குறித்து தனது ஆதங்கத்தை சோனல் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து அவர் பேசியதாவது: இதற்கு முன் 10 படங்களில் நடித்திருக்கிறேன் என்றாலும் இது என் வாழ்வின் முக்கியமான படம். இவ்வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு என் மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன். விளம்பர டிசைன்களில் நாயகன் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டது பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவருக்கு இது முதல் படம் என்பதால் அவரை சற்று கூடுதலாக புரமோட் செய்வதில் தவறில்லை. என்றார்.
படத்தின் நாயகன் ஜெயித் கான் பேசியதாவது: நான் அரசியல் குடும்பத்துப் பிள்ளை என்பதால் சினிமாத் துறைக்கு வருவதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அப்பா நான் சினிமாவுக்குள் வருவதை கடுமையாக எதிர்த்தார். அவரது நெருங்கிய நண்பர்களை வைத்து கன்வின்ஸ் செய்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இந்த இடத்திற்கு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். வரும் நவம்பர் 4ம் தேதியன்று கன்னடம், தமிழ்,மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. என்றார்.