நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் முன்னணி சேனலாக இருக்கும் ஸ்டார் விஜய் சேனல் தற்பேது விஜய் டக்கர் என்ற புதிய சேனலை துவக்குகிறது. இது குறித்து ஸ்டார் விஜய் சேனல் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த சேனல் இன்றைய இளைஞர்களுக்கான ஒரு பொழுது போக்கு பிராண்டாக இருக்கும். பொழுதுபோக்கு துறையில் டிரெண்ட்செட்டராக செயல்படும் சேனலாக இது இருக்கும்.நான் பிக்சன் வகையில், திரைப்படங்கள் மற்றும் இசை என இளைஞர்களுக்கான முழுக்கலவையாவும், இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில், தினமும் தொடர்ச்சியாக பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கொண்டதாகவும் இந்த சேனல் இருக்கும்.
இசை மற்றும் திரைப்படங்களையும் இந்த சேனல் கொண்டிருக்கும். கற்பனை செய்து பார்க்க முடியாத வேடிக்கை மற்றும் பொழுதுபோக்குடன் பார்வையாளர்களுக்கு பலவகை நிகழ்ச்சிகளை வழங்கும். இந்த சேனலின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுடன் உரையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் இதயங்களை நிச்சயமாகக் கைப்பற்றும் அற்புதமான புதுமையான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இது இருக்கும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.