நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான்கான் ஆயிரம் கோடி சம்பளம் கேட்டார், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்காக அவ்வளவு பெரிய சம்பளம் கேட்டார். அதை கொடுக்க டிவி நிறுவனம் முன்வந்தும் அவர் மறுத்துவிட்டார் என்றெல்லாம் கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல்கள் எல்லாம் நேற்றோடு பொய்யாகிவிட்டது. ஹிந்தி பிக்பாஸ் 16வது சீசனை தொகுத்து வழங்கப்போவது சல்மான்கான்தான். இந்த நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்வில் சல்மான்கான் ஆயிரம் கோடி சம்பளம் குறித்தும் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: எனது ஆயிரம் கோடி சம்பளம் பற்றி நானும் கேள்விப்பட்டேன். இது உண்மையாக இருந்தால் வாழ்க்கையில் இனி சம்பாதிக்கவே வேண்டாமே என்று மகிழ்ச்சி அடைந்தேன். இந்த அளவுக்கு சம்பளம் பெற்றால் வழக்கறிஞர் கட்டணம் உட்பட பல்வேறு வகை செலவுகளும் அதிகமாகும். மேலும் இந்த செய்தி வருமான வரித்துறைக்கு கிடைக்கும். அவர்கள் நோட்டீஸ் அனுப்பினால் உண்மை வெளிவரும்.
ஆயிரம் கோடி சம்பளம் பற்றி வதந்தி பரப்பியவர்களுக்கு கூடுதலாக ஒரு தகவல் சொல்கிறேன், அந்த சம்பளத்தை நான் திருப்பிக் கொடுத்துவிட்டேன். இந்த 12 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தியதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அதில் இதுவும் ஒன்று என்றார் சல்மான்கான்.