ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மலையாளத்தில் தனது அறிமுகத்தை துவங்கிய துல்கர் சல்மான் கடந்த 10 வருடங்களில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக உயர்ந்து நிலையான இடத்தை பிடித்துள்ளதுடன் தற்போது பாலிவுட்டிலும் தேடப்படும் நபராக மாறியுள்ளார். சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்த சீதாராமம் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது, பல பேட்டிகளில் அவரிடம் கேட்கப்படுவது என்னவென்றால் எப்போது அவரது தந்தை மம்முட்டியுடன் அவர் இணைந்து நடிக்கப் போகிறார் என்பது தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “நான் எப்போதுமே என் தந்தையுடன் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் இன்னும் அவர் பக்கமிருந்து எந்த ஒரு கிரீன் சிக்னலும் வரவில்லை. இப்பொழுதே வெள்ளை முடிகள் எட்டிப்பார்க்கின்ற தாடியை மஸ்காரா போட்டு சமாளித்து வருகிறேன். அவர் அப்படியேதான் இருக்கிறார். இப்போது அவர் இருக்கும் தோற்றத்தைப் பாருங்கள்.. ஒருவேளை அவருக்கு தந்தையாக கூட நான் நடிக்கும் நிலை வந்தாலும் வரலாம்” என்று தந்தையை வியந்து பாராட்டியுள்ளார் துல்கர் சல்மான்