ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வெற்றி பெற்றதுடன் அல்லாமல் நாயகன் அல்லு அர்ஜுனுக்கும் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகாவிற்கும் ஒரே பாடலுக்கு ஆடிய சமந்தாவுக்கும் கூட ரசிகர்களிடம் இன்னும் மிகப்பெரிய அளவில் அங்கீகாரங்களை பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக கடந்துசென்ற விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் நடித்த கதாபாத்திர தோற்றத்தில் விதவிதமான பிள்ளையார் சிலைகள் உருவாக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தன. பொதுமக்களால் அதிக அளவிலும் வாங்கி செல்லப்பட்டன.
தற்போது நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வட மாநிலங்களில் கொண்டாட்டமும் கோலாகலமும் துவங்கியுள்ளன. ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா ஆடிய சாமி சாமி பாடல் பள்ளிக்கூடங்களில், கலை நிகழ்ச்சிகளில், என குழந்தைகள், இளம்பெண்கள் என பலராலும் விரும்பி ஆடப்பட்டு அந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் குஜராத்தின் ஒரு கிராமம் ஒன்றில் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது சாமி சாமி பாடலை ஒலிக்கவிட்டு கிராமத்து பெண்கள் வட்டமாக நின்று கோலாட்டம் அடித்து ஆடும் வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இது ஒரு பக்கம் என்றால் டீனேஜ் இளைஞர்களும் சாமி சாமி பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களும் வெளியாகி ஆச்சரியத்தை இருமடங்காக்கி வருகின்றன.