500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், பெரிய அளவில் அறிமுகமில்லாத ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் சம்யுக்தா சண்முகம். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளருடன் கூட்டணி சேர்த்துக்கொண்டு நடிகர் ஆரியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததால் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து விமர்சனத்திற்கு ஆளான சம்யுக்தா அதன்மூலமே பிரபலமும் ஆனார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் காபி வித் காதல் படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்துள்ள சம்யுக்தா தெலுங்கில் விஜய் முதன் முதலாக நடித்து வரும் வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரம் என்றாலும் விஜய்யுடன் நடித்த காட்சிகள் தனக்கு திருப்திகரமாக அமைந்தது என்று கூறியுள்ளார் சம்யுக்தா. படப்பிடிப்பில் விஜய்யுடன் நடித்த பழகிய அனுபவம் குறித்து கூறும்போது விஜய்யின் நடிப்பை, அவரது அர்ப்பணிப்பு உணர்வை நேரில் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது அவருடைய குடையை கூட அவரே தான் தன் கையில் வைத்துக்கொண்டு பிடித்துக் கொள்கிறார். அந்த அளவிற்கு அவர் எளிமையான மனிதர். அவரது நடிப்பை இன்னும் படம் வெளியாவதற்கு முன்பே பார்த்து ரசித்த முதல் ஆள் என்பதால் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்று விஜய் பற்றி பிரமித்து கூறியுள்ளார் சம்யுக்தா.