மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். கன்னட சீரியலில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய அவர், தமிழில் 'கேளடி கண்மணி' தொடரின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 'மகராசி' தொடரில் நடித்து கொண்டிருந்த போது திடீரென தொடரை விட்டு விலகினார். தற்போது மீண்டும் அதேசேனலில் 'செவ்வந்தி' என்கிற புதிய தொடரில் நடித்து வருகிறார். மிகக் குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் ரசிகர்கள் ஏராளமானோர் திவ்யாவுக்கு ரசிகர்களாகிவிட்டனர்.
திவ்யாவின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததையடுத்து அண்மையில் பிரபல சீரியல் நடிகரான ஆர்னவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சிம்பிளாக நடத்தப்பட்டு சென்னை புரசைவாக்கத்தில் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, திவ்யாவுக்கு ஆர்னவுடன் திருமணம் நடந்தது பலருக்கு தெரியாது. திவ்யாவும் அவரது முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை ஜெய்சனாவும் தற்போது ஆர்னவுடன் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ஆர்னவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் திவ்யா பகிர்ந்திருந்தார். இதனால், அவரது ரசிகர்கள் முதலில் குழம்பி போயினர். அதன்பின் திவ்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து தெளிவடைந்து பிறகு இரண்டாவது குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.