Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வாரிசு' விஜய்யை 'துணிவு'டன் எதிர்க்கப் போகிறாரா அஜித்?

25 செப், 2022 - 12:07 IST
எழுத்தின் அளவு:
Thunivu-clash-with-Varisu

இன்றைய தமிழ் சினிமா உலகில் கடும் போட்டியில் இருப்பவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் விஜய், மற்றொருவர் அஜித். கடந்த சில வருடங்களாகவே இவர்கள் இருவருக்கும் போட்டி இருக்கிறதோ இல்லையோ அவர்களுடைய ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.

சமூக வலைதளங்களில் எல்லை மீறி சண்டை போட்டுக் கொள்பவர்கள் இருவரது ரசிகர்கள். அவையெல்லாம் சாதாரண சண்டை அல்ல, பல சமயங்களில் அசிங்க அசிங்கமான சண்டைகளும் அரங்கேறும். இருவரது படங்களும் நேருக்கு நேராக மோதிக் கொள்வது எப்போதாவதுதான் நடக்கும். இருவர் படங்களும் மோதல் இல்லாமல் வந்தாலே மோதிக் கொள்பவர்கள் ஒரே நாளில் இருவரது படங்களும் வந்தால் சும்மா இருப்பார்களா?.

அப்படி ஒரு சூழல் தற்போது ஆரம்பமாகி உள்ளது. விஜய் நடித்து வரும் 'வாரிசு' படமும், அஜித் நடித்து வரும் 'துணிவு' படமும் 2023 பொங்கலுக்கு மோதிக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டு படங்களின் படப்பிடிப்பு தற்போது கடைசிக் கட்டத்தை அடைந்துள்ளது.

'வாரிசு' படத்தை 2023 பொங்கலுக்கு வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். 'துணிவு' படத்தின் வெளியீடு பற்றி இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்புகள் வரலாம். ஆனாலும், அதற்குள்ளாகவே இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஐஸ்வர்யா ராய் மகளை 'ஆக்ஷன்' சொல்ல வைத்த மணிரத்னம்ஐஸ்வர்யா ராய் மகளை 'ஆக்ஷன்' சொல்ல ... நடிகர் போண்டாமணிக்கு, ரூ.1 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் தனுஷ் நடிகர் போண்டாமணிக்கு, ரூ.1 லட்சம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)