ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் நடிகையாக அறிமுகமானது மணிரத்னம் இயக்கத்தில் வந்த 'இருவர்' படத்தில். அதன் பிறகு தமிழில் 'ராவணன்', ஹிந்தியில் 'குரு' ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். நான்காவது முறையாக 'பொன்னியின் செல்வன்' படத்திலும் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் மும்பை புரமோஷன் நிகழ்வுகள் நேற்றும் இன்றும் நடக்கிறது. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “ஒரு சரித்திரப் படத்தில் ஐஸ்வர்யா ராய் ராணியாக நடிப்பது பற்றி அவரது மகள் ஆராத்யா என்ன சொன்னார்,” என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராய், “ஆராத்யா இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படப்பிடிப்பு சமயத்தில் அவள் ஆச்சரியத்தில் மயங்கி இருந்தார். இங்கு குழந்தைகளுடன் இருப்பவர்கள் பலர். ஒரு சரித்திரப் படத்தைப் பார்ப்பது எப்போதுமே உற்சாகமாக இருக்கும். படப்பிடிப்புத் தளத்தைப் பார்த்த வாய்ப்பு ஆராத்யாவுக்குக் கிடைத்தது. அதை அவள் பார்த்த போது மெய் சிலிர்த்துப் போனாள். அதை அவளது கண்களில் பார்த்தேன்.
மணிரத்னத்தின் மீது எனது மகள் பிரமிப்பில் இருக்கிறாள். அவருடன் பணிபுரிந்தது எனது பாக்கியம் என நினைக்கிறேன். ஆராத்யாவும் அவரை மதிக்கிறாள். அவள் மீது மணிரத்னம் சாரின் பாசமும் இனிமையானது. ஒரு நாள் படப்பிடிப்புக்கு ஆராத்யா வந்த போது 'ஆக்ஷன்' சொல்லும் வாய்ப்பை அவளுக்குத் தந்தார் மணிரத்னம். அதிலிருந்து அவளால் மீள முடியவில்லை. 'எனக்கு அந்த வாய்ப்பை சார் கொடுத்தார்,' எனப் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள். 'மை காட்' வேறு யாருக்கும் அவர் அப்படி ஒரு வாய்ப்பு தந்ததில்லை என்று சொன்னேன். அதுதான் மிகவும் உற்சாகமான ஒரு மறக்க முடியாத அனுபவம் என நான் நினைக்கிறேன். அது விலைமதிப்பற்றது, அதை அவள் பெரிதாக நினைக்கிறாள். அவள் வளர வளர இதை இன்னும் பெருமையாக நினைப்பாள் எனக் கருதுகிறேன்,” என்றார் ஐஸ்வர்யா ராய்.
ஆராத்யா ஆக்ஷன் சொன்ன காட்சியை தியேட்டர்களில் பார்க்கும் போது இன்னும் உற்சாகமாகவே நினைப்பார். அதைப் பார்க்கும் அம்மா ஐஸ்வர்யாவின் பாசமும் இன்னும் அதிகமாக இருக்கும்.