அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
துணை நடிகர் மகாகாந்தி என்பவர் விஜய்சேதுபதி மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் விஜய்சேதுபதி தன்னை ஜாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், ஆட்களை வைத்து தாக்கியதாகவும் தெரிவித்திருந்ததோடு அதற்கான வீடியோ ஆதாரத்தையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதிக்குச் சம்மன் அனுப்பியது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி விஜய் சேதுபதி சார்பில் சென்னை உயர்நீதி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பெங்களூருவில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில் தன் மீதான அவதூறு வழக்கு விசாரணையை தொடரலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.