நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
வெங்கட் பிரபு இயக்கும் நேரடி தெலுங்கு படத்தில் நாக சைதன்யா நடிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. தமிழிலும் இந்த படம் தயாராவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாகசைதன்யா ஜோடியாக உப்பன்னா, ஷியாம் சிங்காராய், பங்கார்ராஜு, தி வாரியர் படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். தமிழில் தற்போது வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். நாகசைதன்யா இதுவரை நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக உருவாகி வருகிறது.
இளையராஜாவும், யுவன் சங்கர்ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்கள். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இன்று முதல் இதன் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நேற்று (செப்.,22) துவங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், தெலுங்கில் வசனகர்த்தாவாக அபூரி ரவி, எடிட்டராக வெங்கட் ராஜன், புரொடக்ஷன் டிசைனராக ராஜீவன், கலை இயக்குனராக சத்திய நாராயணா, ஸ்டண்ட் இயக்குனர்களாக ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பெண் மற்றும் மகேஷ் மேத்யூ ஆகியோர் பணியாற்ற உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.