நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து அதன் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதைத்தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ் உடன் மாறன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் மாளவிகா மோகனன். அதற்கு முன்னதாக கடந்த 2013ல் மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பட்டம் போலே என்கிற படத்தில் அறிமுகமான மாளவிகா அதன்பிறகு இரண்டு மலையாள படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.
கடைசியாக 2017 ல் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான தி கிரேட் பாதர் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார் மாளவிகா. இந்த படத்தின் துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. கதாநாயகன் என பெரிய ஹீரோ யாரும் இந்த படத்தில் இல்லாத நிலையில் தண்ணீர் மாத்தன் தினங்கள் படம் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் மேத்யூ தாமஸ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் கேரள சினிமாவில் முக்கியமான எழுத்தாளர்களான இந்துகோபன் மற்றும் ஆடுஜீவிதம் நாவலை எழுதிய பென்யமின் இருவரும் இணைந்து இந்த படத்திற்கு கதை எழுதி உள்ளனர். ஆல்வின் ஹென்றி இயக்குகிறார். இளம் வயதினர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த படம் உருவாகிறது.