நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மஞ்சள் சிவப்பு பச்சை படத்திற்கு பிறகு தமிழில் சித்தார்த் நடித்த படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. சமீபத்தில் தெலுங்கில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த மகாசமுத்திரம் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் என்.ராஜசேகர் என்பவர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த படத்தில் கதாநாயகியாக ஆஷிகா ரங்கநாத் என்பவர் நடிக்கிறார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தனது சிறுவயது கனவு நனவானதாக கூறியுள்ளார் ஆஷிகா.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை கடந்த வருடமே என்னிடம் தொலைபேசியில் கூறினார்கள். படத்தின் கதையும் கதாபாத்திரமும் பிடித்திருந்தாலும் இரண்டு ஹீரோக்கள் கதை என்பதால் அதில் நடிப்பதற்கு சற்று தயங்கி சம்மதம் தெரிவிக்காமல் இருந்தேன். சில மாதங்கள் கழித்து அதே படக்குழுவினர் என்னை அழைத்து இந்தப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் சித்தார்த் ஒரு கதாநாயகனாக நடிக்கிறார் என்றும், அவருக்கு ஜோடியாக நீங்கள் நடிக்கிறீர்கள் என்றும் கூறினார்கள். உடனே மறுயோசனை எதுவும் செய்யாமல் நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன். காரணம் நான் பள்ளியில் படித்த காலத்தில் சித்தார்த்தின் படங்களை பார்த்து அவரது ரசிகையாகவே மாறியவள். இப்போது அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது கனவு நனவானதாகவே எனக்கு தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்