Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் நடவடிக்கை : துல்கர் சல்மான் எச்சரிக்கை

19 செப், 2022 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Dulquer-salmaan-gave-warnning

மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது சீதாராமம் படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான நடிகர் ஆகிவிட்டார். அடுத்து பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள சுப் படத்தில் நடித்துள்ளார். சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 23ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. திரைப்படங்களை மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்களை கொலை செய்து அவர்கள் உடம்பில் ஸ்டார் பதிக்கும் த்ரில்லர் கதை.

மும்பையில் நடந்த இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் பேசியதாவது: சமீபகாலமாக சோஷியல் மீடியாக்களில் திரைப்படங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அதுவும் முன்னணி நடிகர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் மிக மோசமான தோல்வியை சந்திக்கின்றன.

என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை பதிவு செய்து வைத்துள்ளேன். அந்த பதிவுகளை பதிவிட்ட ஐடிக்கள் எனக்கு நன்றாக தெரியும். நடிகர் மீதான விமர்சனங்கள் புதிதல்ல. ஆனால் வரம்பு மீறி செல்லும்போது அதை நான் எதிர்க்கிறேன். தனிப்பட்ட முறையில் நடிகர்களை விமர்சிப்பதும், ட்ரோல் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வீடு, அலுவலகம் கட்ட இடம் தாருங்கள், விமர்சனங்களுக்கு கடிவாளம் : தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம்வீடு, அலுவலகம் கட்ட இடம் தாருங்கள், ... 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பரத் - வசந்தபாலன் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
19 செப், 2022 - 21:29 Report Abuse
NicoleThomson பல தனிப்பட்ட தாக்குதல்களும் வைரல்களும் செய்வது மலையாளிகள் தான் என்பதை உணர்ந்துள்ளீர்களா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in