500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர் மயில்சாமி. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‛‛சாதி, மதம், பேதம் பார்க்காமல் தர்மம் செய்ய வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே சரியாக இருக்கும். இந்து, முஸ்லீம், கிறிஸ்து என மதங்களை பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. இதில் ஒருவர் வேண்டாம் என பிரித்து பார்ப்பவர் மனிதனே கிடையாது. மூன்று பேரும் சேர்ந்து இருப்பது தான் இந்தியா. ஓட்டுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். மக்கள் ஒரு போதும் ஏமாற மாட்டார்கள். திருப்பி பதிலடி கொடுப்பார்கள். எந்த உலகத்திற்கு சென்றாலும் உழைப்பு தான் முக்கியம், மொழி அல்ல'' என்றார்.