ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ் சினிமாவில் 1986ம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் ராமராஜன். கிராமிய கதைகளாக நடித்து வந்த ராமராஜனுக்கு கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த கரகாட்டக்காரன் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அப்படம் வருட கணக்கில் தியேட்டர்களில் ஓடியது. தொடர்ந்து அவரின் பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. அதோடு எம்ஜிஆர் பாணியில் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று தொடர்ந்து உறுதியாக இருந்து வந்ததால் ஹீரோ மார்க்கெட் டல் அடித்த பிறகு தேடிச்சென்ற கேரக்டர் வேடங்களில் நடிக்க மறுத்தார் ராமராஜன்.
இந்த நிலையில் 2001ம் ஆண்டு ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்த ராமராஜன், அரசியலில் சிலகாலம் பயணித்தார். 2012ம் ஆண்டில் மேதை என்ற படத்தில் நடித்தவர் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். ரமேஷ் என்பவர் இயக்கும் இந்த படத்தில் ராதாரவி, எம். எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படம் 5 மொழிகளில் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அது குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது.