நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களாக உயர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா. அவர்களது வாரிசுகளான இரு மகள்களான ஷிவானி, ஷிவாத்மிகா நடிகைகளாக அறிமுகமாகிவிட்டார்கள். இருவரும் தமிழ்ப் படங்களிலும் நடித்துவிட்டார்கள்.
ஷிவானி “அன்பறிவு, நெஞ்சுக்கு நீதி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஷிவாத்மிகா 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது தெலுங்கில் இரண்டு படங்களிலும், தமிழில் 'நித்தம் ஒரு வானம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவாத்மிகா அடிக்கடி போட்டோ ஷுட் புகைப்படங்களைப் பதிவிடும் வழக்கம் கொண்டவர். கடந்த இரு தினங்களாக அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. கிளாமர் புகைப்படங்களாக அவை இருப்பதே அதற்குக் காரணம்.
தமிழ், தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த ஷிவாத்மிகாவின் அம்மா ஜீவிதா கிளாமராக நடித்ததில்லை. ஆனால், அவருடைய இளைய மகள் ஷிவாத்மிகா இப்போது கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறாரோ என டோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.