நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி 'கனவுகள் இலவசம்' என்ற தொடர் மூலம் டி.வி.நடிகை ஆனவர் தேவதர்ஷினி. 2003ம் வெளியான 'பார்த்திபன் கனவு' படத்தில் விவேக்குக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்திற்காக சிறந்த காமெடி நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றார். அன்று முதல் காமெடி நடிகை ஆனார் அதன்பிறகு குணசித்ர வேடங்களிலும் நடித்தார்.
தொடர்ந்து, காக்க காக்க, எனக்கு 20 உனக்கு 18, காதல் கிறுக்கன் , காஞ்சனா, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மர்மதேசம் தொடரில் தன்னுடன் நடித்த சேத்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சேத்தன், தேவதர்ஷினி தம்பதிகளின் மகள் நியதி கதம்பி சினிமாவில் ஹீரோயின் ஆகிறார்.
மகளை வைத்து தனியாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தேவதர்ஷினி. மகளை நடிகையாக்கும் முயற்சியில் இருக்கும் அவர் இதற்காக கதை கேட்க தொடங்கியிருக்கிறார். நியதி கதம்பி ஏற்கனவே விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தில் தேவதர்ஷியின் பள்ளி பருவ மாணவி தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.