நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சினிமாவில் அறிமுகமாகி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார் ரம்யா பாண்டியன். அவரது அறிமுகப்படம் தவிர அடுத்து அவரது நடிப்பில் வெளிவந்த 'ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
'குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4' ஆகிய டிவி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடமும் பிரபலமானார் ரம்யா. அதைவிட சில ஆண்டுகளுக்கு முன்பு புடவை அணிந்து அவர் எடுத்த போட்டோ ஷுட் ஒன்று அவரை அதிகமாகப் பிரபலமாக்கியது.
அதற்குப் பிறகு அவ்வப்போது விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷுட் புகைப்படங்களைப் பதிவிட்டு வருபவர் ரம்யா. இன்று அவர் வெளியிட்ட போட்டோ ஷுட் புகைப்படங்கள் கவர்ச்சிகரமாக அமைந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலாடையாக வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் விதவிதமான கமெண்ட்டுகளை அளித்து வருகிறார்கள். பேஷன் போட்டோ ஷுட் என்றாலே கிளாமர், கவர்ச்சி என்றாகிவிட்டது.