லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |
பல்வேறு சிக்கல்களை கடந்து வரும் 7ம்தேதி விஸ்வரூபம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் குறிப்பிட்ட 7 காட்சிகளை நீக்க முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த காட்சிகள் விவரம் வெளியாகியுள்ளது.
படத்தின் தொடக்கத்தில், இது இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ மற்ற சாதி-மதத்தினரின் கோட்பாடுகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல, இது ஒரு கற்பனை கதை, என டைட்டில் போடப்படும்.
படத்தில் ஆங்காங்கே காட்சிகளின் போது ஒலிக்கும் திருக்குர்ரான் வசனங்கள் நீக்கப்பட்டு வெறும் காட்சிகள் மட்டும் ஓடும். திருக்குர்ரான் வசனம் பின்னணியில் அமெரிக்கரின் தலை துண்டிக்கப்படும் காட்சிகளும், வசனமும் நீக்கப்படும்.
ஆப்கன் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விளையாடுவது போல
காட்டப்பட்டுள்ளதும் நீக்கப்படும், என்று கமல்ஹாசன் தரப்பு
உறுதியளித்துள்ளது. இதுதவிர சில இடங்களை வசனங்களை நீக்கவும் கமல்ஹாசன்
ஒப்புக் கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
அமெரிக்காவில் குண்டு வெடிப்பை தடுப்பதற்காக கமல்ஹாசன் பிரார்த்தனை செய்யும் காட்சிகளும், பின்னணியில் தெரியும் தொழுகை நடத்தும் காட்சிகளும் நீக்கப்படும்.
முல்லா ஒமர் கோவையிலும், மதுரையிலும் தலை மறைவாக இருந்தார் என்பதை சித்தரிக்கும் காட்சிகள் நீக்கப்படும். நடிகர் நாசர் ஒரு காட்சியில் முஸ்லிம் அல்லாதவர்களை அப்புறப்படுத்துவதே முஸ்லிம்களின் கடமை என்று வசனம் பேசுவார். அந்த காட்சிகள் நீக்கப்படும்.
இந்தக்காட்சிகள் எல்லாம் நீக்கப்பட்டு வருகிற பிப்-7ம் தேதி படம் தமிழகத்தில் திரைக்கு வர இருக்கிறது.